லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவருக்கும் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
நஸ்முல் அகமது மற்றும் சலீம் அஹமத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்து நஸ்முல் அஹ்மதுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் சலீம் அகமதுக்காண தண்டனை 22ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கும் பொழுது நஸ்முல் ஒரு சூறையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு பற்றி டிடெக்ட்டிவ் கூறுகையில், “நஸ்முல் மற்றும் சலீம் எளிதில் சிக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து மோசடி செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தனது தோழிகளுடன் வந்த இளம்பெண் ஒருவரிடம் காரில் வந்த நஸ்முல் பேச்சுக் கொடுத்து காரில் ஏற்றி உள்ளார். பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ஹோட்டலுக்கு வந்த 20 வயது பெண் ஒருவர் சுயநினைவின்றி இருந்துள்ளார். எழுந்து பார்த்த பொழுது அவரது வங்கி அட்டை, செல்போன் அவர் வைத்திருந்த பணம் உள்ளிட்டவை காணாமல் போயுள்ளது. அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை மேற்கொண்டதில் அவரை ஏமாற்றியது நஸ்முல் என தெரிய வந்தது.
இந்தக் குற்றத்திற்கு நஸ்முல் காதலியும் உதவி செய்துள்ளார். இதேபோன்று சகோதரர்கள் இருவரும் கார் ஓட்டுனர் போலவே பெண்களை ஏமாற்றி வன்கொடுமை செய்து அவர்களது பணத்தை திருடி உள்ளனர். இந்த சூழலில் 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் அவர்களை கைது செய்தோம்.நஸ்முலுக்கு உதவியாக இருந்த அவரது காதலிக்கு 140 மணி நேரம் சம்பளமின்றி பொதுப்பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.