ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு கூடும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களில் சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் பிறக்ககும். சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்து அதிகாரம் கிடைக்கும். இன்று வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும்.
கூடுமானவரை காரியங்களை செய்யும் பொழுது நிதானத்துடன் செய்யுங்கள். இன்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. மனம் நிம்மதியாகவே காணப்படும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். உங்களுடைய மனைவியின் ஒத்துழைப்பும் கொஞ்சம் கிடைக்கும். இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். நல்ல முன்னேற்றகரமான சூழ்நிலையையும் கொடுக்கும். இன்று தன வரவுக்கு எந்த வித குறையும் இல்லை.
கூடுமானவரை காரியங்களை செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானமாக செய்யுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இன்று இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்