Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்…. தாங்க முடியாத இழப்பு… அண்ணன், தம்பி உயிரிழப்பு…!!

அண்ணன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குப்பம் கைகாட்டி என்ற பகுதியில் திருவேங்கடம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாலமுருகன், சுந்தரமூர்த்தி என்ற  இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இதில் சுந்தர மூர்த்திக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதோடு பாலமுருகனுக்கு சத்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களில் சுந்தரமூர்த்திக்கு கடந்த சில ஆண்டுகளாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இதனையடுத்து அவரது அண்ணன் பாலமுருகனுக்கும் இரண்டு சிறுநீரகங்களும் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாலமுருகன் திடீரென இறந்ததை கண்ட அவரது தம்பி சுந்தரமூர்த்தி அழுதுகொண்டே இருந்தார். இதனையடுத்து திடீரென சுந்தரமூர்த்தியும் உயிரிழந்துவிட்டார். மேலும் அண்ணன் தம்பி இருவரும் எப்போதும் மிகுந்த பாசத்துடன் இருந்ததால் அண்ணன் இறந்த சோகத்தில் தம்பியும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |