இலண்டனில் ஒரு குடியிருப்பின் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்களின் சடலம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
கிழக்கு இலண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்கள் சடலம் மீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 35 வயதான ஜாஹித் யூனஸ் என்ற வாலிபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதில் , 3 குழந்தைகளுக்கு தாயான மிஹ்ரிகன் முஸ்தபா மற்றும் ஹென்றிட் சுக்ஸ் (34) ஆகிய இருவரையுமே ஜாஹித் யூனஸ் கொலை செய்து குளிர்சாதனப் பெட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்க பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனையில் அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த காயங்களால்மரணம் அடைந்துள்ளது தெரியவந்தது.
ஹேங்கேரிய நாட்டை சேர்ந்த சுக்ஸ் நிலையான முகவரி எதுவுமே இல்லாமல் பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் தங்கி வந்துள்ளார். அவர் கடைசியாக 2006ம் ஆண்டில் இருந்து காணாமல் போனார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதேபோன்று சைப்ரஸ் நாட்டவரான முஸ்தாபா 2018 மே மாதத்தில்இருந்து மாயமானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஜாஹித்தின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது குடியிருப்பு பகுதியில் குளிசாதன பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகளாக அவரது வீட்டில் சடலம் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.