BSNL நெட்வொர்க்கை பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். BSNL அதன் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாயிலாக இயக்குகிறது. BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்த நிலையில் இப்போது BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி BSNL பாரத்பைபர் அதன் 3 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப் போகிறது. ஏனெனில் இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
தற்போது அந்த காலம் முடிந்து விட்டதால் தொலைத் தொடர்பு நிறுவனம் அச்சேவையை நிறுத்தப் போகிறது. BSNL ரூபாய்.275 பிராட்பேண்ட் திட்டங்களில் இரண்டை நிறுத்துகிறது. இது தொடர்பாக நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இணையதளபக்கத்தில் ரூபாய்.275 பாரத்பைபர் திட்டங்களின் 2 திட்டங்களும் நவம்பர் 15ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அறிவித்து இருந்தது. ரூபாய்.275 பிராட்பேண்ட் திட்டங்கள் இரண்டும் மாதாந்திர டேட்டா போஸ்ட் 3.3 டிபி மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை அளிக்கிறது. ரூபாய்.275 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் என்னவெனில், ஒன்று 30 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது.
மற்றொன்று 60 MBBS வேகத்துடன் வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் மொத்தமாக 75 தினங்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டங்களை தொடர்ந்து BSNL நீக்கப்போவது ரூபாய்.775 திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 2டிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது, இணையத்தை பயன்படுத்திய பிறகு அதன் வேகம் 10 MBBS ஆக குறைக்கப்படும். ரூபாய்.775 திட்டமானது 150 MBBS வேகம் மற்றும் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அத்துடன் இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், லயன்ஸ்கேட், ஹங்கமா, சோனி லிவ், ஜீ5, வூட் மற்றும் யுப் டிவி ஆகிய பல்வேறு ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் கிடைக்கிறது.