Categories
மாநில செய்திகள்

BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… புதிய 2 அதிரடி ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்…!!!!

நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைதொடர்பு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாகும் பிஎஸ்என்எல் அதன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலமாக ஜியோ, ஏர்டெல் மற்றும் vi போன்றவற்றிற்கும் எப்போதும் கடுமையான போட்டியை அளிக்கிறது. bsnl சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதை குறைந்த விலையில் மிகப்பெரிய நன்மைகளை அளித்து வருகிறது.

இந்த திட்டங்களை பற்றி இங்கே காண்போம் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனமான bsnl அதன் பயனளர்களுக்காக இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் ஒரு திட்டத்தின் விலை 300 ரூபாய்க்கு குறைவாகவும் மற்றொன்று 800 ரூபாய்க்கும் குறைவாகவும் இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளும் ஒரே மாதிரியானவை தான் இருப்பினும் இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி அதாவது செல்லுபடி காலத்தில் வேறுபாடு இருக்கிறது. 300 ரூபாய்க்கும் குறைவான பிஎஸ்என்எல் திட்டத்தின் ரூபாய் 269 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற  வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தை வாங்கும் பயனர்களுக்கு ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், சேலஞ்சர் அரீனா கேம்ப்ஸ், லிஸ்டன் பாட்காஸ்ட் சர்வீஸ், ஹாப்பி மொபைல் கேம் சர்வீஸ், லோக்துன் மற்றும் ஜிங் போன்றவற்றிற்கான அணுகல் கிடைக்கிறது.  அடுத்து பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய இரண்டாவது திட்டத்தின் விலை 769 ஆகும். இந்த திட்டம் ரூபாய் 269 திட்டத்தை போலவே 2ஜிபி தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு போன்ற பலன்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் என்ற காரணத்தினால் இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |