சென்னை தொலைத்தொடர்பு வட்டாரத்தில் செல்போன், லேண்ட்லைன், பிராட்பேண்ட், எப் டி டி எச் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. புகார்கள் குறித்து 7நாட்களில் பதில் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகவலுக்கு chennai.bsnl.co.in என்ற இணையதளத்தை காணலாம்.
மத்திய பகுதிக்கு உட்பட்ட சென்ட்ரல் அடையார் 044-28552216, 9445084760, வடக்கு பகுதிக்கு உட்பட்ட கல்மண்டபம், மாதவரம், அண்ணா நகர், அம்பத்தூர் 044-25395858, 9445083639, மேற்கு பகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், கேகே நகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் 044-23728877, 9445084745, தெற்குப் பகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, செங்கல்பட்டு 044-22501122, 9445084018 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.