Categories
தேசிய செய்திகள்

BSNL‌ நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம்…. காரணம் என்ன…? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!

நாடாளுமன்றத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் இழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு கூட தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை 24,58,527 தொலைத்தொடர்பு இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுள்ளது. அதன் பிறகு குறிப்பிட்ட இடங்களில் 4 ஜி சேவையை வழங்க முடியாமல் போனதோடு, தனியார் நிறுவனங்களின் போட்டி, கடன் நிதி சுமை மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பிஎஸ்என்எல் நிறுவனமானது 57,671 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இதேப்போன்று எம்டிஎன்எல் நிறுவனமும் 14,989 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை இந்த இழப்புகளை சந்தித்துள்ளது. மேலும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டி ன்எல் நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று கூறினார்.

Categories

Tech |