பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
ஜியோ வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பி.எஸ்.என்.எல்லுக்கு 4ஜி வழங்குவதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக பி.எஸ்.என்.எல். அகில இந்திய அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீதர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.