சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதியை இழிவு படுத்துவது, மதத்தை இழிவு படுத்துவது போன்ற புகார்கள் பெருகியதோடு மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் இந்த சம்பவத்தை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சாதி, மதம், சமூக மரபு பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிடுபவகள் மீதும், அந்த கருத்து பகிர்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் ஒரு செய்தியில் உண்மை தன்மையை மறைத்து வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.