2019-20க்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை பாராட்டி துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
2019 – 20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்ததையடுத்து,தமிழக துணை முதலமைச்சர் O. பன்னீர் செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதராமனுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு செல்லவும், பட்ஜெட் அறிக்கை அடித்தளமாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்கான முன்னேற்றம் மற்றும் சிறு குறு வியாபாரிகளுக்கு பயன்படும் விதமாக இந்த பட்ஜெட் அறிக்கை அமைந்திருக்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கான ஒற்றுமையை மாநிலங்களிடையே அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் அறிக்கை அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.