பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான முதல் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று பேசப்படும் இன்றைய சூழலில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரது கவனமும் இந்த பட்ஜெட் மீது தான் உள்ளது என சொல்ல வேண்டும்.
கடந்த பதினோரு ஆண்டுகள் கண்டிறாத அளவிற்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மை, உணவு பொருள்களின் விலையில் கடந்த நாப்பது ஆண்டுகள் கண்டிறாத அளவு உச்சம் தொட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் இந்திய பொருளாதார வளர்ச்சி எட்டு விழுக்காட்டில் இருந்து 4.5 விழுக்காடாக சரிந்துள்ளது. மேலும் இந்த 4.5 விழுக்காடு வீழ்ச்சி Q2 (ஜூலை-செப்டம்பர் காலாண்டில்) தான் நிகழ்ந்துள்ளது.
தொழிலாளர் சக்தியைக் கொண்டிருக்கும் உற்பத்தித் துறை, கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியமான வேளாண்மை துறை இரண்டும் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் எதிரொலி கண்டிப்பாக இந்திய பொருத்தரத்தை பாதிக்கும்.
அண்மையில் உலக பொருளாதார அவுட்லுக் (World Economic Outlook) வெளியிடப்பட்ட தகவல்படி, உலக பொருளாதார மன்ற உச்சி மாநாட்டின் பக்க வரிசைகளில் இந்தியாவின் வளர்ச்சியை உருவாக்கும் விகிதம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் பணக்காரன் அதிக பணக்காரன் ஆகிறான், ஏழை அதிக ஏழையாகிறான் என்ற பழமொழிக்கு ஏற்ப பணக்கார-ஏழை பிளவுகளைத் தீர்க்க உறுதியான நடவடிக்கை தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வீழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கான வழி என்ன?
உயர் அரசாங்க செலவு ஒரு உகந்த தீர்வாக இருக்கும்.
தற்போதைய பொருளாதார மந்தநிலை பெரும்பாலும் விநியோக பக்க சிக்கல்களைக் காட்டிலும் தேவை பக்க சிக்கல்களால் தோன்றுகிறது.
வேறு விதமாக கூறினால், சந்தையில் போதுமான பொருள்கள் மற்றும் சேவைகள் கிடைக்கும்போது கூட, மக்கள் போதுமான அளவிற்கு கொள்முதல் செய்வதில்லை. இதனால் தான் இந்திய பொருளாதாரம் அதிக அளவு சரிவை சந்திக்கிறது.
பெரும்பாலான மக்கள் குறைவான அளவே கொள்முதல் செய்வதால் அவர்களின் தேவை குறைவு என நாம் எண்ணிவிடமுடியாது. உதாரணமாக ஒருவரின் மாத சம்பளம் 20,000 ரூபாய் என்றால், அந்த 20,000 ரூபாய் கொண்டே அவர்களால் செலவு செய்ய முடியும். அந்த நபரின் தேவை அதிகமாக இருப்பினும் போதுமான அளவு பணம் இல்லாததால் கொள்முதல் அளவு குறைவாகவே உள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூட, நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், தேவையும் குறைந்து வருகிறது என்றது.
எனவே, இதற்கான தீர்வு பொருளாதாரத்தில் தேவைப்படும் தேவையை புதுப்பிப்பதில் உள்ளது.
அரசாங்க செலவினம், உள்கட்டமைப்பிற்கான கவனம் செலுத்தினால் அது கண்டிப்பாக வேலை வாய்ப்பை உருவாக்கும். அதன் எதிரொலி பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும். 2019 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 135 புள்ளிகள் அல்லது 1.35 விழுக்காடு குறைத்தது. இந்த குறைப்பு வீடு கார் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் என்றும் இதனால் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
வருமானம் அதிகமாக இருந்தால் மட்டுமே நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு செலவினங்களில் கவனம் செலுத்தினால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், வேலை வாய்ப்பு அதிகரித்தால் மக்களிடையே பணப்புழக்கம் ஏற்படும். அதன் எதிரொலி மீண்டும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதனால் செலவினங்களைப் பற்றி கவலைபடத் தேவைஇல்லை. இன்றைய முதலீடுகள் நாளைய லாபமாக மாறலாம்.
எந்த துறையில் செலவு செய்யலாம்?
ஒருமுறை நாம் செலவழிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து ஒரு தெளிவு வந்தால், எங்கே செலவு செய்வது என்ற கேள்வி வருகிறது.
வேளாண்மைத் துறையில் செலவு செய்வதன் மூலம் அது சிறந்த பலனைத்தரும். 2002-2011 ஆண்டுகளில் 4 .4 விழுக்காடாக இருந்த வளர்ச்சி தற்போது 3 .1 விழுக்காடாக குறைந்துள்ளது.
அதனால் வேளாண்மை துறையில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரம்.
சரியான நேரத்தில் முதலீடு செய்வதோடு, சரியான துறையில் முதலீடு செய்தால் விரைவில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும்.