Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சரிசெய்ய மின் வாகன உற்பத்தியில் கவனம் தேவை

வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலில் ஸ்டீல் நிறுவனங்களுக்கும், மின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதிகளவு சலுகை வழங்க வேண்டும் என மூலப்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் சாந்தனு ராய் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் எழுதிய கட்டுரை இதோ…

மின்வாகனங்கள் சேவை :

உலகம் முழுவதும் மின் வாகனங்கள் அல்லது புகை உமிழா வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணமே எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள்தான். ஆகையால், விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை வீழ்த்தி மின்வாகனங்களின் சேவை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தற்போதே நிரூபிக்கின்ற வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் கூர்மையான பார்வையை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியுள்ளன. அதன்படி 2019ஆம் ஆண்டு மின் வாகன உற்பத்தியில் அதனைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன.

இனி இந்தியாவும் சீனாவும்தான் :

ஊக்கமளிக்கும்விதமாக மின் வாகனங்களின் விற்பனை உயர்ந்திருப்பதால் 2020ஆம் ஆண்டு இதனை விரிவுபடுத்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

மோர்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவும், சீனாவும் மின் வாகன பயன்பாட்டில் உலகை வழிநடத்தும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கலாகும் மத்திய நிதிநிலை அறிக்கையில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் அளவிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

அது எப்படி சாத்தியம்?

மின் வாகன உற்பத்திக்கு லித்தியம் என்றழைக்கப்படும் வெள்ளிபோல் தோற்றமுள்ள மென்மையான உலோகம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் நம் நாட்டில் அதிகளவு கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதனை நீண்ட காலம் சேமித்துவைக்கும் வழி தெரியாததால், பெரும்பாலும் இறக்குமதியை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டு 106.54 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இதனை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் பொருள்களில் எட்டு முதல் பத்து சதவிகிதம் இருக்குமதி ஆகிறது.

அதிகமான ஸ்டீல் உற்பத்தி, லித்தியத்தை சேமித்தல் மூலம் குறைவான தொகையில் அதிகளவு மின் வாகனங்களை உற்பத்தி செய்யலாம்.

பட்ஜெட் 2020-21: சலுகைகள், மானியங்கள் தேவை :

  • பட்ஜெட் தாக்கலின்போது ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்குவதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
  • இறக்குமதி செய்யப்படும் உலோகங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் இத்துறையை மேலும் மேம்படுத்தலாம்.

இதுபோன்ற மாற்றங்கள் வந்தால் மட்டுமே பொருளாதார மந்தநிலையை சரிகட்ட முடியும்.

Categories

Tech |