பட்ஜெட் 2020 ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ஆம் ஆண்டு ஆட்டோமொபைல்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் சுமார் 50 விழுக்காடு பங்களிப்பை தரும் துறையாக ஆட்டோமொபைல் துறை விளங்குகிறது. இந்த சரிவு காரணமாக நாட்டில் பலர் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகளில் வேலை இல்லாத நாட்களில் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், கிராமப்புற மக்களின் தேவைகள் குறைந்ததாலே ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது என்பது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.35 விழுக்காடு குறைத்ததும் , மக்களை தங்கள் பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்க வைக்க மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்கிராபட்ச் திட்டமும் ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றியதாக தெரியவில்லை.
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை சிறு மற்றும் குறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுப்பது நிதி அமைச்சருக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. வரி வருவாய் குறையும் அபாயமும் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தொழில்துறையை காக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட போகிறார் என்பது சனிக்கிழமை தான் தெரியும் .