Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021 – “கல்வித்துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு”… என்னென்ன அறிவிப்புகள்…!!

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில் கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும், 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உயர்கல்வித் துறைக்கு புதிய குழு நியமிக்கப்படும்.

அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கிய திட்டங்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய திட்டம் நிறைவேற்றப்படும். மேலும், தேசிய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கான புதிய திட்டமும் உருவாக்கப்படும். கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். கல்வித்த்துறைக்கு இந்த ஆண்டு ரூ 99,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 4.96 சதவீதம் அதிகம் ஆகும்.

Categories

Tech |