Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021 – தமிழகத்திற்கு பம்பர் திட்டங்கள்… என்னன்னு தெரியுமா.?

2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். இதில் தமிழகத்தில் கூடுதலாக நெடுஞ்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசி 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 11,500 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் தொடங்கபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ பணிகள் விரிவுபடுத்தப்படும். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 119 கிமீ தூரத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

Categories

Tech |