2021-2022 மத்திய பட்ஜெட் எதிரொலியாக பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் 2021-2022 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து பகல் 12 மணி நிலவரப்படி மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்தில் உள்ளது.
அதன்படி சென்செக்ஸ் 872.17 புள்ளிகள் அதிகரித்து 47,157.94 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி குறியீடு 241 .50 புள்ளிகள் அதிகரித்து 13,876.10 ஆகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தனியாருக்கு அரசு துறை நிறுவனங்கள் விற்பனை என்பது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.