2021- 2022 மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக உள்ளதாக முதல்வர் பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.
2021- 2022 மத்திய பட்ஜெட் பாரளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களும் சிறப்பு வாய்ந்ததாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மோடி புகழாரம் சூட்டினார். இதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன என முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.
மதுரை- கொல்லம், சித்தூர்-தச்சுர் சாலை திட்டங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். புதிய மெட்ரோ லைட், மெட்ரோ நியோ திட்டங்களை கோவை, மதுரையில் செயல்படுத்த ஒப்புதல் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.