கௌதம புத்தர் என்று சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் முதலில் நியாபகம் வருவது போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது, இவர் தனது தனது 13வது வயதில் திருமணம் பண்ணது, அதன்பிறகு ராகுலன் அப்படிங்கிற ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தது, 29 வயதில் வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் முதன்முதலாக வயோதிகம், மரணம் இது எல்லாத்தையும் பார்த்ததும் கானகம் நோக்கி போனது இது எல்லாமே ஏற்கனவே தெரிஞ்சு வைத்த ஒரு வரலாறுதான். அதையும் தாண்டி புத்தர் என்ன பண்ணாரு அப்படிங்கறது பல பேருக்கும் தெரியாமல் இருக்கும்.
கானகம் சென்ற புத்த அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் இருந்து யோக நெறியில் தவத்தில் இருந்தார். இவர் தவத்தை பார்த்து பல சீடர்கள் அவருக்கு கிடைச்சாங்க. வாரணாசி பக்கத்துல உள்ள சாரநாத் என்கிற இடத்தில் முதன்முறையா 5 பேர் சீடரா இவருக்கு வந்தாங்க. பல நாட்கள் கழிச்சு ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து சென்ற போது தன்னுடைய சீடன் கிட்ட யாழ் பற்றியும் அதனோடு நுணுக்கம் பற்றியும் சொல்லிட்டு போனார்.
ஒரு நாணை யாழில் இனைக்கும்போது அது அதிகமாக இழுத்து காட்டினால் அறுந்து விடும். ரொம்ப தளர்வாக கட்டினால் இசை நீட்ட முடியாது என்று சொன்னார். சித்தார்த்தாவோட அறிவு அப்போ வேலை செய்ய ஆரம்பிச்சது. தன்னோட கடந்த காலத்துல போதையும், பெண் போகத்தையும், செல்வ செழிப்பாக வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறார். இதே நிலை நீடிக்கும் என்றால் தான் தேடிவந்த ஞானமடைவதற்கு முன்னரே இறந்துவிடுவோம் என்பதை உணர்ந்தார்.
அதனால கடுந்தவம் இருப்பதை கைவிட என்னி அதனால போகும் இடங்களில் யாசகம் கேட்டு உணவு சாப்பிட்டு அவருடைய ஞானத்தை பல பேருக்கும் அறிவுறுத்தினார். அவருடைய வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆனார்கள். தன்னுடைய எண்பதாவது வயதில் புத்தர் குசினாரா அப்படி என்கிற இடத்தில் காலமானார். கௌதம புத்தர் அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.
இவருக்கு 563- 483 இடையில வாழ்ந்தவர். கௌதம புத்தர் கிறிஸ்து பிறப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னாடியே வாழ்ந்து இருக்கலாம் அப்படின்னு நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு பழமையான பௌத்த வழிபாட்டு ஸ்தலம் நேபாளத்தில் இருக்கு. கௌதம புத்தருக்கு முன்னாடி இந்த பூமியில் பல புத்தர்கள் அவதரித்து இருக்கிறதா சொல்லப்படுது