Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீண்டிய காட்டு யானை… துணிந்து விரட்டிய காட்டெருமை… வைரலாகும் வீடியோ..!!

காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்..

அதில்,  காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள்  மேய்ந்து கொண்டிருக்கின்றன.. அதேபோல அந்த இடத்தில் காட்டெருமைகளும் இருக்கின்றன.. அதில் படுத்து கிடந்த காட்டெருமையின் அருகில் சென்று விரட்டும் படியாக சீண்டுகிறது. பின் எழுந்து வந்த எருமை ஓடிச்சென்று காலில் முட்டி விரட்டுகிறது.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

 

 

Categories

Tech |