அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம், இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரைக்கு அருகில் 12 மாடி கொண்ட கட்டிடம் கடந்த ஜூன் மாதத்தில் 25ஆம் தேதியன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. இந்த பயங்கர விபத்தில் பல பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.
எனவே மீட்புக்குழுவினர் சுமார் 11 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் எட்டு நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.