Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இடிந்து விழுந்த கட்டிடம்.. ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நபர்..!!

அமெரிக்காவில் புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாட்டிக்கொண்ட ஒருவர், சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி என்ற நகரத்தில் கென்னடி என்ற பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல நபர்கள் மாட்டிக்கொண்டார்கள். எனினும் ஒருவர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார். எனவே அவரை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர்.

அந்த நபர் சுயநினைவுடன் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் 4 நபர்களுக்கு லேசான காயமங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ உதவி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |