Categories
தேசிய செய்திகள்

பாந்த்ராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து… ஒருவர் பலி…!!

பாந்த்ரா பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மும்பை மாநிலம், பாந்த்ரா பகுதியில், இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்து 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாந்த்ரா கிராம உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிகளை உருவாக்கியுள்ளனர். அப்பகுதியில் யாரும் சிக்கித் தவிக்காமல் இருப்பதற்காக குப்பைகளை அகற்ற தீயணைப்பு படையினருக்கு உதவி வருகின்றனர் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |