வங்கக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையத்தில் தெரிவித்தது அந்த புயல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
கடந்த 4_ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பிறகு 5 ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் அப்படின்னு கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறும் இதன் பெயர் புல்புல். இது பாகிஸ்தான் வழங்கிய பெயர் ஆகும்.
இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும். அதன் பிறகு வடக்கு திசையை நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒடிசா , மேற்கு வங்கம் இடையில இந்த புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரிசா மாநிலத்தில் அல்லது மேற்கு வங்க மாநிலத்தில் மழை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் இருந்து ரொம்ப தூரத்துல இருக்கிறதனால் தமிழகத்திற்கு இந்த புயலால் எந்த பயனும் இல்லை. இதனால் மழையை நாம் எதிர்பார்க்க முடியாது எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.