Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காளையின் கொம்பை உடைத்து…. கல்லால் தாக்கி கொன்ற…. குடிகார வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி அருகே காளை மாட்டை கல்லால் தாக்கி கொன்ற குடிகார வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல் என்பவர் சென்னசந்திரம் கிராமத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளை மாடு என்றால் அவ்வளவு பிடிக்கும். தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்து காளை மாடுகளை வளர்த்து வருகிறார். எருதுவிடும் விழாவில், பங்கேற்க வைத்து தனது காளை மூலம் பல பரிசுகளை அவர் வென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று பணி முடித்துவிட்டு திரும்பி வருகையில், காளைமாடு படுகாயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததை கண்ட அவர் உடனடியாக கால்நடை மருத்துவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து பார்க்கையில், கொம்பு உடைந்து, மூக்கு,வாய் அருகே ரத்தக்காயங்கள் இருப்பத்தையும் மரத்தில் சேதம் இருப்பதையும் கண்ட அவர்கள், அருகில் இருந்த மரத்தில் தன்னைத் தானே காளை காயப்படுத்திக் கொண்டதை அறிந்தனர்.

இதையடுத்து காளையை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முயற்சி செய்கையில் காளை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த வெற்றி, மனமுடைந்து தனது வீட்டில் அழுதபடி இருந்துள்ளார். அப்போது அவருக்கு வீடியோ ஒன்று வாட்ஸாப்பில் வந்தது. அந்த வீடியோவை கண்டதும் வெற்றிக்கு பயங்கர அதிர்ச்சி, ஏனெனில் வீடியோவில் இவரது காளை கட்டப்பட்டிருக்கும் கொட்டகைகளில் வழக்கமாக வாலிபர்கள் சிலர் மது அருந்த வருவார்கள். அவர்கள் இந்த முறையும் வந்து மது அருந்தி விட்டு அங்கே நின்று கொண்டிருந்த காளையை சீண்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த காளை அவர்களை முட்ட வரும் சமயத்தில் அவர்கள் விலகிவிட, மரத்தில் முட்டி கொம்பு உடைந்து காயம் அடைந்துள்ளது. இதை அவர்கள் திரும்பத் திரும்ப செய்ய காளையின் மூக்கு, வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிபட்டு ரத்தம் கசிந்த வண்ணம் உள்ளது. இதை அடுத்து ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்த மாட்டை கல்லை தூக்கிப் போட்டு அடித்தும் அந்த இளைஞர்கள் டார்ச்சர் செய்துள்ளனர். இந்த வீடியோவை கண்டதும் மேலும் கண் கலங்கியபடி ஆத்திரத்துடன் காவல் நிலையம் சென்று சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது வெற்றிவேல் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் வீடியோவில் இருந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |