மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய இடுப்பு எலும்பை நொறுக்கவும், ஹிந்தி தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ…
அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில் மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். 1937 ஆம் ஆண்டு, ஜூலை 12ஆம் நாள். ஹிந்தி தான் இனிமேல் தமிழ்நாட்டிலே எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஆச்சாரியார் ராஜாஜி கூறிய போது, அதிலிருந்து 17ஆம் நாள்…
தஞ்சையிலே கரந்தையிலே.. உமா மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் ஒரு தமிழர் மாநாடு கூடியது. அதற்கு அடுத்து, திருவையாறிலே கூடியது, அதற்கு அடுத்த ஆம்பூரில் கூடியது, அதற்கு அடுத்து திருநெல்வேலியில் கூடியது, அதற்கு அடுத்த 1937 டிசம்பர் 14ஆம் நாள் காவேரி ஆற்றங்கரையிலே ஒரு மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் தான் முதல் முறையாக தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை வைத்தார்.
இதே தியாகராய நகரில் தான் உனக்கு இங்கு என்னடா இங்கு வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு, எங்களுடைய உணவு வேறு. உன்னுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு, எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்போ, ரகளை வேண்டாம்.
என்று பேசி, அவர் உயிர்நிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு… கடைசியாக பேசிய தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் கூறும் போது சொன்னார்… திராவிடர்கள் வீரத்திற்கும், மானத்திற்கும் பெயர் போனவர்கள். துப்பாக்கி தோட்டாக்கள் பாயகூடும். மார்பு காட்டுங்கள், முதுகிலே படும்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் இதே வார்த்தையை சொன்னார் 37லே… அதன் பிறகு ஹிந்தி மிரண்டு பின்வாங்கி ஓடியது. 1938 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம், எல்லா இடங்களிலும் நடைபெற்றது.