Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் ஆர்.டி.மலையில் சீறிப்பாய்ந்த காளைகள் ….!!

 கரூர் மாவட்டம், தோகை மலையை அடுத்த இராச்சா ண்டார் திருமலை என்கின்ற ஆர்.டி.மலையில் 58 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் 850 காளைகள் பதிவு செய்து கலந்துகொண் டன. அவற்றிற்கு கால்நடை துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். காளைகளை அடக்க 420 மாடு பிடி வீரர்கள், 75 பேர் கொண்ட குழுவாக களம்  இறங்கினர். ஒரு சில மாடு கள் பிடிபட்ட நிலையில் மற்ற மாடுகள் பிடிபடாமல் வீரர் களை மிரட்டிச் சென்றன.

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பாத்திரங்கள், கட்டில், மெத்தை, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், குக்கர், அயன்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பரிசு வழங்கினார்.  குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர், ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |