Categories
தேசிய செய்திகள்

வீட்டு வேலைக்கு செல்லாத இளைஞர்…”மொட்டை அடிக்கப்பட்டு மிரட்டல்”… பிக் பாஸ் 2 பிரபலத்தின் மனைவி கைது…!!

வீட்டு வேலைக்கு வராததால் இளைஞரை மொட்டை அடித்து மிரட்டிய பிக்பாஸ் புகழின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தலித் இனத்தைச் சார்ந்த ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், குடும்ப வறுமை காரணமாக, தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 2 புகழான நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் திடீரென்று வேலையிலிருந்து நின்றிருக்கிறார்.  ஒரு மாதம் மட்டும் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்த மாதம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து நூதன்நாயுடுவின் மனைவி மதுப்பிரியா என்பவர், ஸ்ரீகாந்தை வீட்டுக்கு வரச்சொல்லி  அவர் வீட்டில் பணிபுரியும் மற்ற பணியாட்களை வைத்து ஸ்ரீகாந்தை  அடித்துத் துன்புறுத்தி மிரட்டியுள்ளார். அதோடு விட்டு விடாமல் சலூன் கடைக்காரரை வரவைத்து மொட்டை அடிக்கச் செய்துள்ளார் என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுப்ரியா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |