இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சிக்ஸரை அடித்து விராட் கோலியை துள்ளி குதிக்க வைத்தார்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இறுதியாக ஆட்டத்தின் கடைசி ஓவரான 50வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் கடைசி ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் அப்போது களம் இறங்கிய பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, கம்மின்ஸ் வீசிய கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.
அப்போது போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி, அவர் அடித்த சிக்ஸரை கண்டு மகிச்சியடைந்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். மேலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஷிகர் தவான், உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். மேலும் பும்ரா அடித்த அந்த சிக்ஸர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த முதல் சிக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
That moment when @Jaspritbumrah93 hits the last ball for a maximum 😅😅#INDvAUS pic.twitter.com/e6iOHorg8N
— BCCI (@BCCI) March 10, 2019