புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் கடல் பகுதி அமைந்துள்ளது. அந்த கடல் பகுதியில் ஒரு மூட்டை மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் மூட்டையிலிருந்த மொத்தம் 23 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.