துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக தனவரவு அதிகரிக்கும். உடலை பேணிக் காப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்காது. பங்களா போன்று அழகிய தனி வீடு உங்களுக்கு அமையும். அதாவது வீடு வாங்க கூடிய யோகம் இன்று உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். இன்று மனத்தெளிவு ஏற்படும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். உடல் நிலையில் சின்னதாக ஒரு மாற்றம், என்னவென்றால் வயிறு கோளாறு சம்பந்தமான சிறு பிரச்சனை வரக்கூடும். அதற்காக நீங்கள் சரியான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டால் போதுமானது.
பணவரவு உங்களுக்கு கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வீகபக்தி போன்றவை அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தை வெற்றியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். மூத்த சகோதர்களிடம் விட்டுக்கொடுங்கள் , அது நன்மையை கொடுக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதே போல ஆதாயம் தரும் பதவிகளை நீங்கள் வகிக்கக்கூடும். அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்க கூடும். அதேபோல விளையாட்டுத் துறையில் உங்களுக்கு ஆர்வம் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இன்று இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். செல்வ பாக்கியங்களும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்