ஈரோடு பீரோ தயாரிக்கும் ஆலையில் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் வரதராஜன் தெருவில் தங்கம் என்பவருக்கு சொந்தமான பீரோ தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்த ஈரோட்டைச் சேர்ந்த தொழிலாளி பூகேஷ் ஆலையின் அறை ஒன்றில் கழுத்தறுபட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த சூரம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பூகேஷை உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் யாரும் கொலை செய்தார்களா? அல்லது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.