நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டியில் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு தேயிலை பறிக்க வந்த தேயிலை தொழிலார்கள் புதைக்கப்பட்ட நிலையில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தையின் கால் தென்பட்டதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் புதைக்கப்பட்டதா? அல்லது கொலைச் செய்து புதைக்கப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.