பிரித்தானிய விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றின் எஞ்சின் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு வந்த சரக்கு விமானம் ஒன்று பிரித்தானியாவில் உள்ள East Midlands என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது அந்த விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. இதற்கிடையே The Scottish Sun பத்திரிக்கை அந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விமானத்தின் பக்கவாட்டிலிருந்து டமார் என்ற சத்தம் கேட்டதோடு ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் விமான எஞ்சினிலிருந்து புகையும் வெளிவந்துள்ளது. ஆனால் எஞ்சின் எதற்காக தீ பிடித்தது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் எஞ்சினிக்குள் ஏதோ இழுக்கப்பட்டதை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.