‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், விரைவில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஆடியோ உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
It gives us immense pleasure to announce that we have bagged the audio rights of the eagerly awaited @VelsFilmIntl @SilambarasanTR_ 's #VendhuThanindhathuKaadu !#VTKAudioOnThink@menongautham @arrahman @IshariKGanesh @rajeevan69 @jeyamohanwriter @utharamenon5 @siddharthcinema pic.twitter.com/7F1ZzF7E06
— Think Music (@thinkmusicindia) December 7, 2021