ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு தடைப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்கும், ஆப்கானிஸ்தான் நாட்டிற்குமிடையே கடந்த 2016ஆம் ஆண்டு பேருந்து சேவை தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தங்கள் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாவட்டத்திலிருந்து மீண்டும் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் நாட்டில் மீண்டும் பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அரசாங்கம் அடுத்த ஆண்டிலிருந்து ஆப்கன் நாட்டிற்கு பேருந்து சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.