Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகள்…!!

சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஹைதராபாத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகே உள்ள சாலையில் திரும்ப முயற்சிக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தெரியவந்துள்ளது.

இந்த பேருந்தில் பயணித்த 30 பயணிகளில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |