பேருந்தின் மீது கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.பி.கே புதுப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கிரேன் வாகனம் தனியார் பேருந்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவரான திருப்பதி உட்பட 6 பயணிகள் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளன. அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.