Categories
உலக செய்திகள்

சூடானில் கோர விபத்து…. லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து…. 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், அனைத்து பயணிகளும் கதறினர். இந்த கொடூர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 நபர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். அவர்கள் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |