Categories
உலக செய்திகள்

கனடாவில் கோர விபத்து…. பனிப்புயலில் சிக்கி பல முறை உருண்ட பேருந்து… 4 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல்  மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் கெலோவானா நகரத்திலிருந்து வான்கூவர் நகருக்கு புறப்பட்ட ஒரு பேருந்து பனிச்சரிக்கில் சிக்கி கவிழ்ந்தது. பலமுறை உருண்ட பேருந்து கடும் விபத்தில் சிக்கியது. இந்த கொடூர விபத்தில் நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும், 50-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |