நேபாளத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் இருக்கும் சன்குவாஷபா என்னும் மாவட்டத்தின் மதி பகுதியிலிருந்து ஒரு பேருந்து இன்று காலையில் டமாக் பகுதி நோக்கி புறப்பட்டது. அப்போது சத் கும்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென்று விபத்துக்குள்ளாகி, 2 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும், 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பேருந்து அதிக வேகமாக வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருக்கிறது. விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.