நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.