Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் காயமின்றி பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டையில் இருந்து கரம்பக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து 25 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கொல்லம்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது பேருந்து பள்ளத்தில் இறங்கி விட்டது.

இதனால் பேருந்து இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, சாலையோரம் இருக்கும் பெரிய பள்ளங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |