Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் பயங்கரம்…. ஆற்றில் கவிழ்ந்து விழுந்த பேருந்து…. 6 நபர்கள் பலியான பரிதாபம்…!!!

ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |