Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தவறுதலாக ஏறிய பெண்…. ஓட்டுநரை தாக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பரக்குடிவிளை தோட்டவாரம் பகுதியில் போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை ஓட்டுனரான பரமேஸ்வரன் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டத்திலிருந்து மேல்மிடாலம் செல்லும் பேருந்தை இயக்கி கொண்டு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் பைங்குளம் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் பேருந்தில் ஏறிய பிறகுதான் அது அந்த ஊருக்கு செல்லாது என்பது தெரியவந்துள்ளது.

உடனே அந்த பெண் பேருந்தை நிறுத்துமாறு கூறியும் பரமேஸ்வரன் பேருந்தை தொடர்ந்து இயக்கி சென்று சானல்முக்கு பகுதியில் நிறுத்தியுள்ளார். அதனை அந்த பேருந்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த  கிள்ளியூர் பறையன் விளை பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பவரும், பைங்குளம் வெட்டைப் பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவரும் பார்த்து பரமேஸ்வரனை கண்டித்து தீடிரென அவரை தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த பரமேஸ்வரன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பரமேஸ்வரனை தாக்கிவிட்டு பால்ராஜ் மற்றும் காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் பால்ராஜை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பால்ராஜை கைது செய்ததோடு தப்பியோடிய காளிதாசை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

Categories

Tech |