Categories
உலக செய்திகள்

உயிர் போகும் முன்… பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு சென்ற டிரைவர்… உருகிய மகன்!

பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட நிலையில் பயணிகளை பத்திரமாக இறக்கி விட்டு உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் guizhou மாகானத்தில் கவுண்டியை சேர்ந்த ஹு குய் பேருந்து ஓட்டுநராக இருப்பவர். கடந்த மாதம் 11ஆம் தேதி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஹு குய் ஆஸ்துமாவால் அவதிப்பட்டுள்ளார். இதனால் தான் மயக்கம் அடைவதற்குள் பயணிகளை பத்திரமாக விட்டுவிட வேண்டும் என நினைத்தவர் பயணிகளை எந்த ஒரு ஆபத்துமின்றி வெளியேற்றி உள்ளார்.

அதன் பின்னர் மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநரை அவரது மகன் ஹு எனபெங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஹு குய் மகன் இது குறித்து கூறுகையில் “தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் உடனடியாக வா என்றும் எனக்கு அழைப்பு வந்தது. இதனையடுத்து நான் செல்வதற்குள் தந்தை மயங்கி இருந்தார்

தனது வாழ்நாள் முழுவதும் அவர் பொறுப்பானவர் ஆகவே இருந்தார் வாழ்க்கையிலும் சரி வேலையிலும் சரி. வேலை செய்வதை நிறுத்தாத ஒரு நபர் அவர். வாழ்வின் கடைசி தருவாயிலும் வேலைப் பார்க்கும் நிறுவனத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். என் தந்தையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன்” எனக் கூறினார்.

Categories

Tech |