பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் முருகன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை மருத்துவர் பரிசோதனை செய்த போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாணவி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பஸ் டிரைவரான முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.