பேருந்து ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக சக்திவேல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் தவித்த சக்திவேல் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.