திருவையாறு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு அருகே தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வரகூர் கிராமத்தின் அருகே பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறக்கியுள்ளார் அப்போது கனமழையின் காரணமாக பழுதடைய மின்சாரம் கம்பி பேருந்தில் இருந்தவர்கள் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்தது.
இதில் பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் சம்பவ இடத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மற்ற அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் குறைவாக இருந்த காரணத்தினால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.