Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி பண்ணிட்டான்… சுக்குநூறாக உடைந்த கண்ணாடி… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரிலிருந்து திம்மனபள்ளி கிராமத்திற்கு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பேருந்து சூளகிரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென அங்கு சென்ற ஒரு மர்ம நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி வீசியுள்ளார். இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விட்டது.

இது குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தை நோக்கி கற்களை வீசி சென்ற அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |